Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. தலா ரூ.3 லட்சம், மாதம் ரூ.2000 – கேரள முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் கேரளாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அவர்கள் பட்டம் பெறும் வரை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், 18 வயதுவரை மாதம் ரூ.2000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |