Categories
மாநில செய்திகள்

தடுப்பூசியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய…. மத்திய அமைச்சரை தங்கம் தென்னரசு சந்திப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார்.

மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என பிரதமருக்கு இன்று கடிதம் எழுதினார். இந்நிலையில் செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தை தமிழக அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |