லண்டனில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை பின்தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு சென்று உள்ளாடைகளை திருடிய சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் கடந்த வருடம் ஒரு பெண்ணை சார்லஸ் கோக்ஸ் என்ற 28 வயது இளைஞர் பின் தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு பல தடவை சென்று தோட்டத்தில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த அந்த பெண் தன் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.
அதன் பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று சார்லஸ் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது உள்ளாடைகள், சாவி மற்றும் செருப்புகளை திருடிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை சிசிடிவியில் பார்த்து அதிர்ந்துபோன அந்தப்பெண் உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின்பு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்து வருடங்கள் பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு $190 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.