மணிரத்னம் தயாரித்துள்ள நவரசா வெப் சீரிஸின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இதில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி, பொன்ராம் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இந்த குறும்படங்களில் விஜய் சேதுபதி, சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘கமலும் காதம்பரியும்’ கதையில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஏற்கனவே கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘நவரசா’ வெப் சீரிஸின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸில் இந்த சீரிஸ் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.