Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் சிகிச்சை அளிக்கும் இணையதளம்… அமைச்சர் ராஜ்நாத் சிங் திறப்பு..!!

ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளம் மூலம் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற முடியும் எனவும், கொரோனா தொற்றிலிருந்து நாடு விடுபட ராணுவ படையின் பங்களிப்பும் மிகவும் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |