நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கையாக இன்று முதல் கிராமம் தோறும் தடுப்பூசி போடப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு கிராமமாக தேர்வு செய்து தடுப்பூசி அளிக்கப்படும். இதனால் கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.