நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சரியான நேரத்தில் படிப்படியாக தளர்வுகள் குறித்து ஆலோசிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.