சென்னை பிஎஸ்பிபி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஆன்லைன் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்தபுகாரையடுத்து, இதுபோன்ற மற்ற பள்ளியில் நடந்த சில பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளும் அடுத்தடுத்து வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. சினிமா பிரபலங்கள் சிலர் தங்களுடைய பள்ளி பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை தற்போது பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 96, மாஸ்டர், அசுரன் படங்களில் நடித்த பிரபல நடிகை கௌரி கிஷன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அடையார் பள்ளியில் படித்த போது சில கசப்பான அனுபவங்கள் எதிர் கொண்டதாக தெரிவித்துள்ளார் .அப்போது பள்ளியில் ஆசிரியர், மாணவர்களை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லாமல் குற்றசாட்டுகளை தங்கள் மேல் சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாமல் தன்னுடன் படித்த அனைவரும் எதிர் கொண்டதாக” குறிப்பிட்டுள்ளார்.