நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கை நீடிக்க தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். அவருடைய தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளின் பயனாக தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது ஆறுதல் தருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.