சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி …..
தேவையான பொருட்கள்:
பல்லாரி – 1/4 கிலோ
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் , கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை , உப்பு, பெருங்காயம், தண்ணீர் மற்றும் சிறிதளவு சுடவைத்த எண்ணெய் சேர்த்து பிசறிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள மாவை உதிர்த்து போட்டு பொறித்து எடுத்தால் சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா தயார் !!!