Categories
மாநில செய்திகள்

சாலையோரம் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம்  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சாலையோரம் வசிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 14 ஆயிரம் பேர் சாலையோரங்களில் வசிக்கின்றனர். இவர்களிடம் எந்த அடையாள அட்டைகளும் கிடையாது. எனவே இவர்களை காப்பகங்களுக்கு அழைத்து வந்து தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |