இன்னும் சற்று நேரத்தில் ப.சிதம்பரம் ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றார்.
இன்று காலை 10 மணிக்கு பிறகு ப. சிதம்பரத்திடம் முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியது. அதில் அந்நிய முதலீட்டில் ஐஎன்எக்ஸ் மீடியா வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தேதிகள் , லஞ்சப்பணம் செலுத்தப்பட்ட கணக்குகள் , அமலாக்கத் துறை குறிப்பிடும் நிறுவனங்களின் எந்தெந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டது செலுத்தப்பட்ட தேதி போன்ற அடிப்படை விவரங்கள் விசாரணை கேட்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவின் முக்கிய அதிகாரியான இருக்கும் பார்த்தசாரதி உள்ளிட்டோர் மேற்கொண்ட இந்த விசாரணையில் இந்திராணி முகர்ஜி அளித்த தகவலின் அடிப்படையிலேயே பல கேள்விகளை சிபிஐ ப.சிதம்பரத்திடம் கேட்டுள்ள்ளது. 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் சிதம்பரம் மழுப்பலான பதிலை அளித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதை சிபிஐ தரப்பினர் நீதிமன்றத்தில் வலியுறுத்தி ப.சிதம்பரத்தை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் அப்போதுதான் பல விவரங்கள் வெளிவரும் என்றும், அவர் மழுப்பலான பதில்களை அளிக்கிறார் , விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதே போல சிதம்பரம் ஏற்கனவே பலமுறை விசாரணை செய்யப்பட்டார் இப்போது அவரை காவலில் எடுத்து விசாரித்து தேவையில்லை என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் குழுவும் தயாராக இருக்கிறது.
இந்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரம் வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோர் ஏற்கனவே நீதிமன்ற வளாகத்திற்கு வந்து விட்டனர். அதே போல ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர், அவரின் மனைவி நளினி , மகன் கார்த்தி சிதம்பரமும் வந்துள்ளார்.
இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு உடனடியாக ஜாமீன் அளிக்க வேண்டும், அவரை சிபிஐ காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் , தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைக்கும் போது மட்டுமே அவர் விசாரணைக்கு வருவார் என்று சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு வாதாட இருக்கிறது.எனவே இந்த விசாரணை மிகவும் முக்கியமானதாகவும், காரசாரமானதாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.