சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புழல் சிறையில் உள்ள சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பேர் பாலியல் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் ராஜகோபாலன் கைதான நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் புகார் அளித்துள்ளனர். புதிய புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை திரட்டும் பணியில் அசோக் நகர் மகளிர் போலீசார் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.