இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கல்குவாரிகள் செயல்படலாம். செல்போன், கணினி விற்பனை கடைகள், கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி கடைகள், காது கருவிகள் மற்றும் கேஸ் அடுப்பு விற்பனை மையங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் திறக்கவும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.