Categories
தேசிய செய்திகள்

பயனாளர்களுக்கு பேஸ்புக் கடும் எச்சரிக்கை…. இனிமே கவனமா இருங்க…..!!!!

உலகம் முழுவதும் அதிக அளவில் பேஸ்புக் என்ற சமூக வலைதள பக்கம் பயன்படுத்தப்படுகிறது. பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துகள் அனைத்தையும் பகிர்ந்து வருவது வழக்கம். ஆனால் தற்போது பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை பேஸ்புக் அனுப்பியுள்ளது. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது, கொரோனா தடுப்பு ஊசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத் தன்மை மிகுந்த தகவல்களை தவறாக ஃபேஸ்புக்- இல் பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த பயனாளர்களின் பதிவுகள், வெகுவாக மக்களை அடையாதபடி நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதற்கு முன்னதாக குறிப்பிட்ட பதிவில் தவறானது என்று எங்களுக்குத் தெரிய வந்தால் அந்த ஒரு பதிவு மேற்கொண்டு பயனாளர்களை அடையாமல் இருக்க வழிமுறைகளை செய்திருக்கிறோம். இப்போது அதன் அடுத்தகட்ட பயனாளரின் பிற பதிவுகள் வராமல் தடுக்கிறோம். எங்களது தளத்துக்கு பயனாளி ஒருவர் வருகிறார் என்றால், அவர் சமூக வலைத்தள பக்கத்தை லைக் செய்வதற்கு முன்னரே அந்த பக்கத்தில் உள்ள தகவல் சரிபார்க்கப்பட்ட நம்பத்தகுந்த பதிவுகள் அவருக்குக் காட்டப்படும்.

அதற்கான பாப் அப் ஒவ்வொரு பேஸ்புக் பக்கத்திற்கும் வழங்கப்படும். மேலும் முன்னராக பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்ஸ்டாகிராம் தளத்தில், புகைப் படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் போன்றவற்றுக்கு லைக் செய்வோரின் எண்ணிக்கையில் பொதுவெளியில் தெரிவிக்காமல் இருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்மூலம் பயனாளர் ஒருவர் தனது பதிவுக்கு எத்தனை லைக் வந்துள்ளது என்பதை அவரின் விருப்பத்திற்கு ஏற்ப மறைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |