இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர், மார்க்சிய சிந்தனையாளர் இரா. ஜவஹர் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று காலமானார். இவரது “கம்யூனிசம் நேற்று இன்று நாளை”, ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’ஆகிய புத்தகங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவரது மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.