Categories
உலக செய்திகள்

இலங்கையில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை.. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தி..!!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்கள் மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் கொரோனா அதிகரித்து வருவதால், ஏற்கனவே இலங்கை செல்லும் மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்திருந்தது.

இது மட்டுமல்லாமல் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்க்கெட்டுகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற பொது இடங்களில் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்திருக்கிறது.

மேலும் இலங்கையில் தொலைதூரத்தில் வாழும் மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான சேவைகள் குறைவாகவே உள்ளது. அதை கவனத்தில் வைத்துக்கொள்ளுமாறும் கூறப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் ஈஸ்டர் தினத்தின் போது தீவிரவாதிகள் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தியபோது 267 நபர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |