தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு, எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் யோகா டாக்டர் அர்ச்சனா தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்த பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய மூலிகை பொடி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து யோகா டாக்டர் அர்ச்சனா கூறும் போது, கொரோனா தடுப்பு சுகாதார பணிகளில் தீவிரமாக ஈடுபடும் பணியாளர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் மூச்சு பயிற்சி செய்வது ஆக்சிஜன் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் என கூறியுள்ளார். இதனையடுத்து யோகா பயிற்சியின் மூலம் உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க முடியும் எனவும், நோய் வராமல் தடுப்பதற்கும் இழந்த சக்தியை பெறுவதற்கும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.