இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகையாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த கையோடு ஒரு சில மாதங்களில் படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு தகவல்கள் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இறப்பு செய்தி காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. எனவே யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. இச்சூழலில் இரக்கமற்று “மாநாடு” படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். ஊரடங்கு முடியட்டும் அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள் என்று சிம்பு ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.