Categories
உலக செய்திகள்

சகோதரிகளை அழைத்து செல்ல வந்த இளைஞர்.. காரில் வரைந்திருந்த கொடியால் ஏற்பட்ட பிரச்சனை..!!

லண்டனில் தன் வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடியை வரைந்திருந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் உள்ள Kantor King Solomon என்ற உயர்நிலைப்பள்ளிக்கு வெளியில் அங்கு பயிலும் தன் சகோதரிகளை அழைத்துச்செல்ல Samiul Islam என்ற இளைஞர் வாகனத்தில் காத்திருந்துள்ளார். அவரது வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடி வரையப்பட்டிருந்துள்ளது. இதனால் சிலர் அவரிடம் வந்து மோசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வந்த காவல்துறையினர் Samiul Islam மீது, பொது ஒழுங்கு சட்டத்தை மீறி, பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தி துன்புறுத்தல் மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக 90 பவுண்டு அபராதம் விதித்து விட்டனர்.

எனவே காவல்துறையினரிடம், Samiul Islam எனக்கு பிடித்த கொடியை தான், என் வாகனத்தில் வரைந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். எனினும் காவல்துறையினர் இது பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, சோதனை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஒரு நபர் தன் வாகனத்தில் பாலஸ்தீன நாட்டின் கொடியை வரைந்திருந்தார். அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சென்று எச்சரிக்கை விடுத்தோம் எவரையும் கைது செய்யவில்லை என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |