Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து…. விரைவில் முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை (ஜூன் முதல் வாரம்) நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னதாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |