Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஊசி போட வெயிட் பண்றோம்” அதிர்ச்சி அடைந்த சப்-கலெக்டர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

12-ஆம் வகுப்பு படித்துவிட்டு ஒருவர் போலி மருத்துவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் விருகாவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிர ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் பொது மக்கள் கூட்டமாக நிற்பதை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று விசாரித்த போது பொதுமக்கள் ஊசி போடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சப்- கலெக்டரிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அந்த மருந்து கடையின் உள்ளே சென்று விசாரித்துள்ளார்.

அந்த விசாரணையில் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மருந்து கடை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அந்த கடையை மூடி சீல் வைத்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டார மருத்துவ அலுவலர் அருண் குமாருக்கு  உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அருண் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |