Categories
மாநில செய்திகள்

நாட்டிலேயே தமிழகத்தில் தான்…. அதிக ஆக்சிஜன் படுக்கை வசதி – சுகாதாரத்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜூன் முதல் வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது உறுதியாகி உள்ளது. மேலும் கிராமப்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |