Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதனால பிரச்சனையா இருக்கு…. சிரமப்படும் பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சீராக மின் விநியோகம் செய்வதற்கு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென உயர் மின் அழுத்த பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் அவ்வப்போது நிறுத்தபடுகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

இதனை அடுத்து உயர் மின் அழுத்தத்தினால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வீண் செலவுகள் ஏற்படுகின்றன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மின் தடை மற்றும் உயர் மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்வதற்கு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |