விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மீன்வெட்டி பாறை அருவியில் தண்ணீர் அதிகளவில் காணப்படுகிறது.
யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென் தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீரோடைகள் குளங்கள் நிரம்பும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயத்திற்கு தேவைக்கேற்ப தண்ணீர் கிடைக்கும் என மகிழ்ச்சியில் உள்ளனர்.