Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் 1 மாத பரோலில் விடுவிப்பு…. வெளியான தகவல்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |