சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த மாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாரியப்பிள்ளை, வடக்கநந்தல் பகுதியில் வசிக்கும் கருப்பன்போன்றோரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக சேஷசமுத்திரம் பகுதியில் வசிக்கும் செல்லமுத்து, கருப்பசாமி, மண் மலை கிராமத்தில் வசிக்கும் கமல சேகர், மல்லிகை பாடி பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன் என மொத்தம் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.