Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்ய… அனுமதி வழங்க வேண்டும்… கமிஷ்னரிடம் மனு அளித்த வியாபாரிகள்…

விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது பலசரக்கு பொருட்களையும் வாகனங்களில் சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி கமிஷ்னரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காய்கறி மற்றும் பழங்கள் நகராட்சி சார்பில் வாகனங்களில் சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.

இதனையடுத்து மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பலசரக்கு பொருட்களையும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பலசரக்கு வியாபாரிகள் விருதுநகர் நகராட்சி கமிஷ்னரிடம் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |