Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவருக்கு இப்படி ஆகிட்டு… பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை அடுத்து கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன வேதனையில் இருந்த சிந்தாமணி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |