Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

4 வருடங்களாக நோயால் அவதி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் சுந்தரி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 4 வருடங்களாக வாத நோயால் அவதிப் பட்டிருக்கிறார். இதனால் சுந்தரிக்கு நடக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இதனையடுத்து மன அழுத்தத்திலிருந்த சுந்தரி வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் களக்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |