Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

60,000 ரூபாயை நிவாரண நிதியாக அளித்த சப் இன்ஸ்பெக்டர்…. சம்மத கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட சூப்பிரண்டு…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஒரு மாதத்திற்கான சம்பளத்தை முதலமைச்சரின் கொரோனாவிற்கான நிவாரண நிதிக்கு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல் துறை தனிப்பிரிவில் சங்கர் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் தன்னுடைய ஒரு மாதத்திற்கான சம்பள பணமான 60,000 ரூபாயை முதலமைச்சரின் கொரோனாவிற்கான நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த நிவாரண நிதிக்கான சம்மத கடிதத்தை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணனிடம் வழங்கினார். அப்போது காவல்துறையினுடைய முக்கிய அதிகாரிகள் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |