முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிக் திரிந்தவர்களிடம் 150 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட காவல் சூப்பிரண்ட் பாஸ்கரன் என்பவர் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் படி காவல்துறையினர் திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில பொதுமக்கள் காரணமில்லாமல் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் இவ்வாறு வெளியில் சுற்றித் திரிந்தால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரித்துள்ளனர். இவ்வாறு திருமானூர் பகுதியில் காரணமில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தவர்களின் 50 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.