Categories
தேசிய செய்திகள்

பெருந்தொற்று காலத்தில்…. ஏன் விவசாய சட்டம்…? – ப.சிதம்பரம் கருத்து…!!

மத்திய அரசின்மூன்று  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தொடங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக திருப்பிக்கொள்ள அரசு நினைக்கிறது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலத்தில் ஏன் போராட்டம்? என்று மக்களிடத்தில் சொல்கின்றனர். ஆனால் பபெருந்தொற்று காலத்தில் ஏன் விவசாய சட்டம்? என்பது தான் உண்மை என்றும், மக்களுக்கான அரசு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |