Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ44,00,000 தங்கம்” மலக்குடலுக்குள் வைத்து கடத்தல்… சோதனையில் முகம் சுழித்த காவலர்கள்..!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியா கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்கிய பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அப்துல் ரகுமான் மற்றும் இப்ராகிம் இஷா ஆகிய இரு பயணிகள் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை  அழைத்துச் சென்று உடமைகளை சோதனையிட்டனர். அதில்,

Image result for தங்க கட்டிகள் கடத்தல்

அவர்கள் இருவரும் மலக்குடலில் தங்கத்தை மறைத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட 18 லேப்டாப்கள் ,தங்க கட்டிகள் உள்ளிட்ட ரூ 44,50,000 மதிப்பிலான பொருட்களை கண்டுபிடித்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதேபோல் திங்கட்கிழமை துபாயிலிருந்து வந்து இறங்கிய இரு பயணிகளிடம் இருந்து  தங்கம் 28 சிகரெட் பாக்கெட்டுகள் 14 பழைய மடிக்கணினிகள் உள்ளிட்ட சுமார் ரூ 42,40,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.

Categories

Tech |