உக்ரைனில், தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மரணத்தின் பிடியில் சிக்கி தப்பியுள்ளார்.
உக்ரைனில் உள்ள போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் ஒரு சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்துள்ளது. இதனால் ஒரு இளம்பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயற்சித்தபோது, அவருக்கு பின்பு நின்று கொண்டிருந்த ட்ரக் நகர்ந்து கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை.
மேலும் அது உயரமான ட்ரக், எனவே ஓட்டுநருக்கும், நின்று கொண்டிருந்த அந்த பெண் தெரியவில்லை. எதிர்பாராமல் ட்ரக் நகர்ந்து, அந்த பெண் மீது மோதி அவர் கீழே விழுந்துள்ளார். ட்ரக்கின் சக்கரங்கள் அவரது தலையை நெருங்கிவிட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். எனினும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரின் நிலை என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. காவல்துறையினர் பல தடவை, சாலைகளை கடக்கும் போது தொலைபேசி பயன்படுத்தாதீர்கள்! என்று எச்சரிக்கை விடுத்தும், மொபைல் போன்களின் மீது மட்டுமே கவனம் வைத்திருக்கும் சிலரால், இவ்வாறான விபத்துக்கள் நிகழ்கின்றன.