Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. கத்தியை காட்டியதால் பதற்றம்…. கைது செய்த காவல்துறை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர் சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மஹாலிங்கம். இவர்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேல மங்கலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான முத்து சேதுபதி என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மகாலிங்கத்தின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |