Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கோவையில் இலவச உணவு…. பசியாறும் ஏழை மக்கள்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பாதிப்பு  அதிகம் உள்ள மாவட்டங்களில் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒருபகுதியாக கோவை மக்களுக்கு வசதியாக அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இது கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இலவச உணவிற்கான செலவு அனைத்தையும் திமுக ஏற்கும் என்று அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் கூறியுள்ளனர்.

Categories

Tech |