காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர்(101) வயது முதிர்வு காரணமாக காலமானார். திருச்செங்கோட்டை சேர்ந்த இவர் தனது 27 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், ராஜாஜி, காமராஜருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசு பள்ளிகளை திறந்து வைத்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்