Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏதோ எங்களால முடிஞ்சது… தொழிலாளர்களின் சிறப்பான செயல்… பாராட்டிய அதிகாரிகள்…!!

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 7,300 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி அருகில் இருக்கும் கோஸ்லாண்ட் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் 40 பெண் தொழிலாளர்கள் சிறுக சிறுக வீட்டில் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இதனையடுத்து 40 பெண் தொழிலாளர்களும் தாங்கள் சேமித்து வைத்திருந்த 7,300 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இந்த தொழிலாளர்கள் பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமாரிடம் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |