மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடமலை மணக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்ற கொத்தனார் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். ராஜ்குமார் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த அவர் “நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்” என அடிக்கடி கூறிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ராஜ்குமார் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.