Categories
விளையாட்டு

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர்…. சுஷில் குமாரின் மற்றொரு கூட்டாளி கைது …!!!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் கூட்டாளிகளில், இதுவரை 8 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான சுஷில்குமார் தரப்புக்கும்  தேசிய சாம்பியனான சாகர் தன்கட் தரப்புக்கும் இடையே  ,கடந்த 4ஆம் தேதி டெல்லியில் உள்ள  சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டுள்ளது . இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர் .இந்த  வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வீரர் சுஷில்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 10 பேரையும் போலீசார் தீவிரமாக  தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி போலீசார்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சுஷில் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஷில் குமாரை  6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்,  சுஷில்குமாரின் கூட்டாளிகள்  4 பேரை  போலீசார் கைது செய்தனர். இதில் பூபேந்தர், மோகித், குலாப் ஆகிய 3 பேர் அரியானாவில்  ஜஜ்ஜார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் மன்ஜீத் என்பவர்  ரோத்தக் மாவட்டத்தை சேர்ந்தவர் . ஆவர். இந்நிலையில் மற்றொரு கூட்டாளியான  ரோகித் கக்கோர் என்பவர்  ,டெல்லி போலீசாரால்  இன்று கைது செய்யப்பட்டார்  . இந்த கொலை  வழக்கில் இதுவரை  8 பேரை போலீசார்  கைது  செய்துள்ளனர் .

 

Categories

Tech |