ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு படகை கண்டதும் அதிகாரிகள் அதன் அருகே சென்றனர்.
இந்நிலையில் அதிகாரிகளை கண்டதும் படகில் இருந்து கடலில் குதித்து தப்பினார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையிட்டபோது மூட்டைகளில் இருந்து சுமார் 120 கிலோ எடையில் கடல் அட்டைகள் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகுடன் சுமார் 10 லட்சம் மதிப்பிலான அட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப்பின் மண்டல வனத்துறை அதிகாரிகளிடம் கடல் அட்டைகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.