Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை. மேலும் அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |