நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு விளக்கமளித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘இன்னா மயிலு” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘லிப்ட்’ படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இதனிடையே இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் ‘லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்த படம் தியேட்டருக்கான படம் தான் . வருகிற ஜூன் 20ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்து விட்டு தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகும்’ என தெரிவித்துள்ளார்.