இந்த நிதியாண்டில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடிக்க போவதில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது விட இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் எண்பத்தி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83.4 சதவீதமாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டை போலவே இந்த நிதி ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அளிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. மேலும் நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் 17.3% 2000 ரூபாய் நோட்டுக்கள் என்று கூறியுள்ளது.