ஐஏன்எக்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணை கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர் விவாதம் தொடங்கிய போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார் எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது.மேலும் சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும்,
இவர் மீது வெளிவர முடியாத பிணை இருக்கின்றது என்றும் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் வழக்கில் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது என்று கூறிய அவர்கள் குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தின் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.எனவே மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி தேவை என்று சிபிஐ தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.