Categories
தேசிய செய்திகள்

வங்கதேச பெண்ணை கடத்தி… இந்தியாவில் கூட்டு பாலியல் செய்த 5 பேர்… பெங்களூருவில் கைது…!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண்ணை கடத்தி வந்து இந்தியாவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வந்தது. அது என்னவென்றால் ஒரு பெண்ணை ஐந்து இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் வீடியோ தான். இதையடுத்து அந்த சம்பவத்தில் உள்ளவர்கள் விவரம் பற்றி யாருக்கும் தெரியாத காரணத்தினால், அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அசாம் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் சாகர் (வயது 23), முகமது பாபு சாஹிக் (30), ரிடோய் பாபோ (25) ஹகில் (23) மற்றும் ஒரு பெண் மொத்தமாக ஐந்து பேர் சேர்ந்து இதனை செய்துள்ளனர். இவர்களை விசாரணை செய்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணும் அந்த நபர்களும் வங்காளதேசம் நாட்டை சேர்ந்த ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணிற்கும் இவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்த காரணத்தினால் இப்படி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடுவதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |