கனடாவில் தற்போது வரை பள்ளிச்சென்று வீடு திரும்பாமல் சுமார் 4100 குழந்தைகள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோர்கள் அனைவருமே பள்ளிக்குச் சென்ற தங்கள் குழந்தைகள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று தான் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வீடு திரும்பாமலேயே கொல்லப்பட்டால் என்ன ஆகும்? என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை தான் கனடாவில் நடந்திருக்கிறது.
அதாவது எந்த நாடாக இருந்தாலும், அங்குள்ள பூர்வ குடியின மக்கள் ஒதுக்கப்படுவார்கள், சில சமயங்களில் கொலை செய்யப்படுவார்கள் அல்லது அடிமைகளாக்கப்படுவார்கள். அந்த வகையில், பள்ளி சென்று வீடு திரும்பாமல் பூர்வகுடியின குழந்தைகள் பலர் மாயமாவதும், உயிரிழந்து கொண்டிருப்பதும் கனடாவில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
Truth and Reconciliation Commission of Canada என்ற அமைப்பினர், இவ்வாறு காணாமல் போன மற்றும் உயிரிழந்த சுமார் 4100 குழந்தைகளை தற்போதுவரை அடையாளம் கண்டுள்ளனர். எனினும் எத்தனை குழந்தைகள் இவ்வாறு இறந்தார்கள்? என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
This is absolutely heartbreaking news. I spoke to Kukpi7 Casimir this evening to offer the full support of Indigenous Services Canada as the community, and surrounding communities, honour and mourn the loss of these children. #cdnpoli https://t.co/4d6D9LOyKJ
— Marc Miller ᐅᑭᒫᐃᐧᐅᓃᐸᐄᐧᐤᐃᔨᐣ (@MarcMillerVM) May 28, 2021
அதாவது residential schools என்ற பள்ளிகளில் பயிலும் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்பு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் Kamloops Indian Residential school என்ற பள்ளி அமைந்துள்ள பகுதியில் ரேடார் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 215 மாணவர்களின் சடலங்கள் அங்கு புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
அவர்கள் இறந்ததற்கான காரணம் என்ன? அதை ஏன் அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை? என்று கேட்டால், அதற்கு பதில் யாரிடமும் இல்லை. இந்த பள்ளி கடந்த 1890 ஆம் வருடத்திலிருந்து, 1969 ஆம் வருடம் வரை செயல்பட்டுள்ளது. அதன்பின்பு அந்த பள்ளி அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் வருடத்தில் பள்ளி மூடப்பட்டிருக்கிறது.
இதனால் குழந்தைகளை கொலை செய்தவர்கள் தற்போது உயிரோடு இருப்பார்களா? அவர்கள் மீது எவ்வாறு? எப்போது? நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று யாருக்கும் தெரியாது..