ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ , சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபிலை தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வி வாத்தி பேசினார். அதில், சிதம்பரம் அவர்களுக்கு அளிக்கப்பட இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும். அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி சாட்சியம் இல்லை. ஐ.என்.எக்ஸ் வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடைபெற வில்லை. வேறு எதற்காகவோ நடைபெறுகின்றது.
நீதிமன்றத்தில் நிற்கும் சிதம்பரத்திடம் நீதிபதியே கேள்வி கேட்கலாம் என்று சரசரவென வாதத்தை முன் வைத்தார்.தொடர்ந்து வாதாடிய அவர் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சிபிஐ இத்தனை நாள் என்ன செய்தார்கள் என்று தெரிவிக்க, அப்போது சிதம்பரம் பேச முற்பட்டதும் சிபிஐ வழக்கறிஞ்சர் துஷார் மேத்தா குறிக்கிட்டதால் துஷார் மேத்தா_வுக்கும் அபிஷேக் மனு சிங்வி_க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரத்திற்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் என்று சிபிஐ_க்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.