தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. ஊரடங்கில் ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்க கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 13 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.